கோலா கரடிகள்
அவுஸ்ரேலியாவின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் கோலா கரடி மிருக இனம் அருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து ,நியூ சவுத்வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய தலைநகர் பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த கரடி இருந்தன .
காட்டுதீ ,வறட்சி ,நோய் ,காலநிலை மாற்றம் மற்றும் காட்டு பிரதேசங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக பாரிய அளவில அருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற காட்டுத் தீ காரணமாக 5 ஆயிரத்துக்கு மேட்பட்ட கோலா கரடிகள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன இந்நிலை தொடருமானால் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இந்த இனம் முற்றாக அழிந்து விடும் என ஆஸ்திரேலிய சுற்று சூழல் அமைச்சர் எச்சரித்து உள்ளார்.
வீடியோ :
Comments