இலங்கையில் முதல் முறையாக இளைஞர் ஒருவர் மூலம் மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிக்க பட்டுள்ளது .
சசிரங்க டி சில்வா என்ற இளைஞர் இதட்கு முன்னரும் எரிபொருள் இல்லாமல் இயக்கப்படும் முச்சக்கரவண்டியை ஒன்று சேர்ப்பதில் பெயர் பெற்றவர்.
மின்சார மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் மொத்தமாக 120 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும் என்றும் அவர் கூறினார்.
மோட்டார் சைக்கிளின் உடல், சேஸ் மற்றும் மின்சார பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என இலங்கையர் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட், 2022க்குள் மோட்டார்சைக்கிள் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார்சைக்கிளின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை
வீடியோ :
Comments