அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன் நான் கண்ட நல்ல மனிதன் - ஆசிப் அஸ்லம் இது கதையல்ல நிஜம் , (20-04-2020) உலகமே கொரோன நோயில் வாடிக்கொண்டிருக்கும் இந்த வேலையில் நமது தாய் நாடாம் இலங்கையில் சிலரின் செயல் மிகவும் பாராட்டக்கூடியதாய் உள்ளது அதில் ஒருவர் தான் ஆசிப் அஸ்லம் கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் . நாடே லாக் டவுன் செய்யப்பட்டிருக்கும் இந்த வேலையில் தனது சமூக சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் இவர் நீண்ட நாட்களாக முஸ்லீம் சமூகத்துக்காக குரல் கொடுப்பவரும் ஆவார் . இவரது சேவையை சமூக வலைத்தளம் ஊடக முழு உலகமே பார்த்து கொண்டிருக்கிறது .இவரது நல்ல செயலை தமிழ் ,சிங்கள மக்களும் பாராட்டக்கூடிய நிலைமை உருவாகி உள்ளது .இவரது சேவை முஸ்லீம் சமூகத்துக்கு நல்ல ஒரு பெயரை தந்துள்ளது .பல மீடியாக்கள் தூவெசம் பேசும் இந்த நேரத்தில் இது ஒரு சவுக்கடி போல் உள்ளது . நண்பரே அரசியல் வாதி செய்ய வேண்டிய வேலையை நீங்கள் இன்று செய்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் அதுவும் உங்கள் உயிரை பணய...