Skip to main content

திருக்குறள் 100 முதல் 1010 வரை

திருக்குறள் 100 முதல் 1010 வரை





100.) இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று

101.) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

102.)காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

103.)பயன்துாக்கார் செய்த உதவி நயன்துாக்கின்
நன்மை கடலின் பெரிது

104.)தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

105.)உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

106.)மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

107.)எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

108.)நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

109.)கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

110.)எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

111.)தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்

112.)செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து

113.)நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

114.)தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்

115.)கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

116.)கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீ அல்ல செயின்

117.)கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

118.)சமன்செய்து சீர்தாக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

119.)சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

120.)வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

121.)அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

122.)காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினுாஉங் கில்லை உயிர்க்கு

123.)செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

124.)நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

125.)எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

126.)ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

127.)யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

128.)ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

129.)தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

130.)கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

131.)ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

132.)பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

133.)ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

134.)மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

135.)அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

136.)ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

137.)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

138.)நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

139.)ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

140.)உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

141.)பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

142.)அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

143.)விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்

144.)எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

145.)எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

146.)பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

147.)அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்

148.)பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

149.)நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

150.)அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

151.)அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

152.)பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

153.)இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

154.)நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

155.)ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

156.)ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

157.)திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

158.)மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்

159.)துறந்தாரின் துாய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

160.)உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

161.0ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

162.)விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

163.)அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

164.)அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

165.)அமுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கயும் கேடீன் பது

166.)கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுாஉம்
உண்பதுாஉம் இன்றிக் கெடும்

167.)அவ்வித்து அழுக்காறு உடையானச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

168.)அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

169.)அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

170.)அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

171.)நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

172.)படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

173.)சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

174.)இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

175.)அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

176.)அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

177.)வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

178.)அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

179.)அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

180.)இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

181.)அறங்கூறான் அல்ல செயிலும் ஒருவன்
को हाो) 9 का.

182.)அறனழ்இ அல்லவை செய்தலின் தீதே
புறனழ்இப் பொய்த்து நகை

183.)புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

184.)கண்ணின்று கண்ணறச் சொல்லிலும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்

185.)அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

186.)பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

187.)பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

188.)இன்னியார் குற்றமும் துாற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
189.)அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை

190.)ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

191.)பல்லார் மூனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

192.)பயனில பல்லார்மூன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது

193.)நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

194.)நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

195.)சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

196.)பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

197.)நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

198.)அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

199.)பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

200.)சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

201.)தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

202.)தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

203.)அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

204.)மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

205.)இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

206.)தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

207.)எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

208.)தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

209.)தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

210.)அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

211.)கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு

212.)தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

213.)புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

214.)ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

215.)ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

216.)பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

217.)மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

218.)இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

219.)நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு

220.)ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

221.)வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

222.)நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

223.)இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலலுடையான் கண்ணே யுள

224.)இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

225.)ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

226.)அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

227.)பாத்துாண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

228.)ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

229.)இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

230.)சாதலின் இன்னாத தில்லை இனிததுாஉம்
ஈதல் இயையாக் கடை

231.)ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

232.)உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

233.)ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்

234.)நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

235.)நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்கடும்
வித்தகர்க் கல்லால் அரிது

236.)தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

237.)புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

238.)வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

239.)வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

240.)வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

241.)அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

242.)நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

243.)அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

244.)மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

245.)அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

246.)பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

247.)அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

248.)பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

249.)தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

250.)வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

251.)தன்னுான் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

252.)பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

253.)படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னுாக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்

254.)பொருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்

255.)உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

256.)தினற்பொருட்டால் கொல்லாது உலெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

257.)உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

258.)செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

259.)அவிசொரிந் தாமிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

260.)கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

261.)உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

262.)தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது

263.)துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

264.)ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

265.)வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

266.)தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

267.)சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

268.)தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

269.)கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்

270.)இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

271.)வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

272.)வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

273.)வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

274.)தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

275.)பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்

276.0நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

277.)புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

278.)மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

279.)கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்

280.)மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

281.)உள்ளத்தால் உள்ளதும் தீதே பிறன்பொருளைக்
கர்ளத்தால் கள்வேம் எனல்

282.)அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

283.)களவென்றும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்

284.)அளவறநேதார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

285.)அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

286.)கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு

287.)வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

288.)பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

289.)தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

290.)உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

291.)மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

292.)பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

293.)பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

294.)புறள்துாய்மை நீரான் அமையும் அகந்தாய்மை
வாய்மையால் காணப் படும்.

295.)எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோார்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

296.)யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

301.)செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்

302.)செல்லா இடத்துச் சினந்திது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற

303.)மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

304.)நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

305.)தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

306.)சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்

307.)சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

308.)இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

309.0உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

310.)இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

311.)சிறப்பினும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

312.)கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

313.)செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

314.)இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

315.)அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

316.)இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

317.)எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

318.)தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்

319.)பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

320.)நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
321.)அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

322.)பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுாலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

323.)ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

324.)நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

325.)நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

326.)கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

327.)தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

328.)நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

329.)கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

330.)உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

331.)நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

332.)கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று

333.)அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப் ஆங்கே செயல்

334.)நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

335.)நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்


336.)நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

337.)ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப்
கோடியும் அல்ல பல

338.)குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

339.)உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

340.)புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

341.)யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

342.)வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல

343.)அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

344.)இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

345.)மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

346.)யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

347.)பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு

348.)தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

349.)பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

350.)பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

351.)பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

352.)இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

353.)ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வயத்தின்
வானம் நணிய துடைத்து

354.)ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

355.)எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

356.)கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

357.)ஓர்த்துள்ளம் உள்ளது உணரனே ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

358.)பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

359.)சர்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

360.)காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

361.)அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து

362.)வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

363.)வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்

364.)துாஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

365.)அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

366.)அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

367.)அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

368.)அவா இல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

369.)இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

370.)ரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

371.)ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி

372.)பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலுாழ் உற்றக் கடை

373.)நுண்ணி நுால்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்

374.)இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

375.0நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

376.)பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

377.)வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

378.)துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

379.)நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

380.)ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று

381.)படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

382.)அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

383.)துாங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு

384.)அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிமுக்கா
மானம் உடைய தரசு

385.)இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

386.)காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

387.)இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

388.)முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

389.)செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

390.)கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

391.)கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

392.)எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

393.)கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

394.)உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

395.)உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

396.)தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் துாறும் அறிவு

397.)யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

398.)ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

399.)தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

400.)கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

401.)அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நுாலின்றிக் கோட்டி கொளல்

402.)கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

403.)கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

404.)கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்

405.0கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

406.)உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

407.)நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

408.)நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் திரு

409.)மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு

410.)விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநுூல்
கற்றாரோடு ஏனை யவர்

411.)செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை

412.)செவக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

413.)செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

414.)கற்றில னாமினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

415.)இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

416.)எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

417.)பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

418.)கேட்பினுங் கேளாத் தகையவே கள்வியால்
தோட்கப் படாத செவி

419.)நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

420.)செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

421.)அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

422.)சென்ற இடத்தால் செலவிடா தீதொரி
நன்றின்பால் உய்ப்ப தறிவு

423.)எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

424.0எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

425.)உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

426.)எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு

427.)அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

428.)அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

429.)எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

430.)அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

431.)செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

432.)இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

433.)தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

434.0குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தருஉம் பகை

435.)வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்துாறு போலக் கெடும்

436.)தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

437.)செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

438.)பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

439.)வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

440.)காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நுால்

441.)அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

442.)உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

443.)அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

444.)தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

445.)சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்

446.)தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

447.)இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

448.)இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

449.)முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

450.)பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

451.)சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

452.)நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

453.)மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

454.)மனத்து எதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

455.)மனந்துாய்மை செய்வினை துாய்மை இரண்டும்
இனந்துாய்மை துாவா வரும்

456.)மனந்துாயார்க் கெச்சம்நன் றாகும் இனந்துாயார்க்கு
இல்லைநன் றாகா வினை

457.)மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

458.)மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து

459.)மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

460.)நல்லினத்தி னுாங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதுாஉம் இல்

461.)அழிவதாஉம் ஆவதுாஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

462.)தெரிந்த இனத்தொடு தேர்ந்தெனண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

463.)ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

464.)தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

465.)வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

466.)செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

467.)எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

468.)ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

469.)நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

470.)எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு

471.)வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் துாக்கிச் செயல்

472.)ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

473.)உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

474.)அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

475.)பீிலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

476.)நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் துாக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

477.)ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

478.)ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

479.)அளவறநேது வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

480.)உளவரை துாக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

481.)பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

482.)பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு

483.)அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறநேது செயின்

484.0ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்

485.)காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

486.)ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

487.)பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

488.)செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

489.)எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

490.)கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

491.)தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

492.)முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

493.)ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

494.)எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

495.)நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

496.)கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

497.)அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

498.)சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

499.)சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

500.)காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

501.)அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

502.)குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு

503.)அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

504.)குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

505.)பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

506.)அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

507.)காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

508.)தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

509.)தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

510.)தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

511.)நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

512.)வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

513.)அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

514.)எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

515.)அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

516.)செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

517.)இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

518.)வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

519.)வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு

520.)நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

521.)பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள

522.)விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்

523.)அளவளா் வில்லாதான் வாழ்க்க குளவளாக
கோடின்றி நீர்நிறைந் தற்று

524.)சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

525.)கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்

526.)பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்

527.)காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

528.)பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

529.)தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்

530.)உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல்

531.)இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

532.)பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு

533.)பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நுா லோர்க்கும் துணிவு

534.)அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

535.)முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னுாறு இரங்கி விடும்

536.)இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்

537.)அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்

538.)புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

539.)இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

540.)உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

541.)ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

542.)வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி

543.)அந்தணர் நுாற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

544.)குடிதழீ இக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு

545.)இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

546.)வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதுாஉங் கோடா தெனின்

547.)இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

548.)எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

549.)குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்

550.)கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

551.)கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

552.)வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

553.)நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

554.)கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

555.)அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

556.)மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

557.)துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

558.)இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

559.)முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

560.)ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நுால்மறப்பர்
காவலன் காவான் எனின்

561.)தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

562.)கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்

563.)வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

564.)இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

565.)அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
போய்கண் டன்னது உடைத்து

566.)கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

567.)கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

568.)இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு

569.)செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

570.)கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

571.)கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

572.)கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

573.)பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்

574.)உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்

575.)கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்

576.)மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்

577.)கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்,

578.)கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு

579.)ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

580.)பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

581.)ஒற்றும் உரைசான்ற நுாலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

582.)எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறி தல் வேந்தன் தொழில்

583.)ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்

584.)வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

585.)கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

586.)துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று

587.)மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று

588.)ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

589.)ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

590.)சிறப்பறிய ஒற்றன்ேகண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

591.)குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

592.)மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

593.)0மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

594.)குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

595.)நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

596.)படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது

597.)இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

598.)மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்

599.)குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

600.)மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு

601.)அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

602.)வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

603.)தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு

604.)தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

605.)இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துான்றும் துாண்

606.)முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

607.)மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்

608.)பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

609.)தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

610.)ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

611.)இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துார்வது அஃதொப்ப தில்

612.)வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

613.)இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

614.)மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

615.)அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்

616.)அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றோமென்று
ஓம்புதல் தேற்றா தவர்

617.)இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

618.)இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

619.)இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

620.)இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு


631.)கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு

632.)வன்கண் குடிகாத்தல் கற்றறி தல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

633.)பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு

634.)தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு

635.)அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

636.)மதிநுட்பம் நுாலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

637.)செயற்கை அறநேதக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

638.)அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

639.)பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

640.)முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

641.)நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதுாஉம் அன்று

642.)ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

643.)கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

644.)திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினுாஉங்கு இல்

645.)சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

646.)வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

647.)சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

648.)விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

649.)பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

650.)இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

651.)துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

652.)என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா் வினை

653.)ஒஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

654.)இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

655.)எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று

656.)ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்
சான்றோர் பழிக்கும் வினை

657.)பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை

658.)கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

659.)அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

660.)சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீ யற்று

661.)வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

662.)ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

663.)கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

664.)சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

665.)வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

666.)எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

667.)உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

668.)கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
துாக்கங் கடிந்து செயல்

669.)துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

670.)எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

671.)சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

672.)துரங்குக துாங்கிச் செயற்பால துங்கற்க
துங்காது செய்யும் வினை

673.)ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

674.)வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால
தீயெச்சம் போலத் தெறும்

675.)பொருள்கருவி காலம் வினையிடனாடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

676.)முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

677.)செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறி வான் உள்ளம் கொளல்

678.)வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

679.)நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

680.)உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

681.)அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை துாதுரைப்பான் பண்பு

682.)அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை துாதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

683.)நுாலாருள் நுால்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

684.)அறிவுரு வாராய்ந்த கல்வி இம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு

685.)தொகச் சொல்லித் துாவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் துாது

686.)கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் துாது

687.)கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை

688.)தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு

689.)விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்

690.)இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு
உறுதி பயப்பதாம் துாது

691.)அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

692.)மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

693.)போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

694.)செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து

695.)எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை

696.)குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்

697.)வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

698.)இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்

699.)கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

700.)பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

701)கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

702.)ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

703.)குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

704.)குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

705.)குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

706.)அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

707.)முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

708.)முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

709.)பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

710.)நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற

711.)அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த துாய்மை யவர்

712.)இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

713.)அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதுாஉம் இல்

714.)ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்

715.)நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

716.)ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

717.)கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து

718.)உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று

719.)புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்

720.)அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்

721.)வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த துாய்மை யவர்

722.)கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்

723.)பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்

724.)கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்

725.)ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

726.)வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நுாலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு

727.)பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நுால்

728.)பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்

729.)கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்

730.)உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

731.)தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

732.)பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

733.)பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

734.)உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

735.)பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

736.)கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின்

737.)இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

738.)பணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து

739.)நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

740.)ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

741.)ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்

742.)மணிநிரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

743.)உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நுால்

744.)சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்

745.)கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்

746.)எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்

747.)முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்

748.)முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்

749.)முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
விறெய்தி மாண்ட தரண்

750.)எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்

751.)பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

752.)இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

753.)பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

754.)அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

755.)அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்

756.)உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

757.)அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

758.)குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை

759.)செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்

760.)ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

761.)உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

762.)உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது

763.)ஒலித்தக்கால் என்னாம் உவரி எலப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

764.)அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

765.)கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

766.)மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு

767.)தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

768.)அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

769.)சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

770.)நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

771.)என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்

772.)கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

773.)பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

774.)கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

775.)விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு

776.)விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

777.)சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

778.)உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்

779.)இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

780.)புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

781.)செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

782.)நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

783.)நவில்தொறும் நுால்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

784.)நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு

785.)புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

786.)முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

787.)அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

788.)உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

789.)நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

790.)இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

795.)அழச்சொல்லி அல்லது இடித்து வழத்தகற்ய
வெல்லார்நடபு ஆய்ந்து கொளல்

796.)கேட்டினும் உண்டோர் உறுதி கிளஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

797.)ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒர் விடல்

798.)உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கள் ஆற்றறுப்பார் நட்பி

799.)கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்

800.)மருவுக மாசற்றார் கேண்மைவுன் நீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு

801.)பழைமை எனப்படுவது யாதெளின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

802.)நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்

803.0பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

804.)விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

805.)பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

806.)எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

807.)அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
பெழிவந்த கேள்மை யவர்

808.)கேளிமுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிமுக்கம் நட்டார் செயின்

809.)கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

810.)விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

811.)பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

812.)உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

813.)உறுவது சீர்தாக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்

814.)அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

815.)செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

816.)பேதை பெருங்கெழி நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

817.)நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

818.)ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

819.0கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

820.)எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழி
மன்றில் பழிப்பார் தொடர்பு

821.)சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு

822.)இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்

823.)பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது

824.)முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்

825.)மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று

826.)நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்

827.)சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்

828.)தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து

829.)மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று

830.)பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரி விடல்

831.)பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்

832.)பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்

833.)நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

834.)ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

835.)ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

836.)பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்

837.)ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

838.)மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

839.)பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

840.)கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

841.)அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

842.)அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

843.)அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

844.)வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

845.)கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதுாஉம் ஐயம் தரும்

846.)அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

847.)அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

848.)ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

849.)காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு

850.)உலகத்தார் உண்டென்பது இல்லன்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

851.)இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரக்கும் நோய்

852.)பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

853.)இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

854.)இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

855.)இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லுாக்கும் தன்மை யவர்

856.)இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணி த்து

857.)மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்

858.)இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லுாக்கின் ஊக்குமாம் கேடு

859.)இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

860.)இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

861.)வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை

862.)அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

863.)அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

864.)நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

865.0வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

866.)காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்

867.)கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

868.)குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து

869.)செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

870.)கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி,


871.)பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

872.)வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

873.)ஏழுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

874.)பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

875.)தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று

876.)தேறனேம் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

877.)நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

878.)வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு

879.)இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

880.)உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்

881.)நிழல்நிரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்

882.)வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

883.)உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

884.)மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்

885.)உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

886.)ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

887.)செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

888.00அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி

889.)எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு

890.)உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று

891.)ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

892.)பெரியாரைப் பேணாது ஒழுகிற் பரியாரால்
பேரா இடும்பை தரும்

893.)கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

894.)கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

895.)யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

896.)எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

897.)வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

898.)குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியாடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

899.)ஏந்திய கொள்கையார் சிறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

900.)இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

901.)மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

902.)பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

903.)இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

904.)மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று

905.)இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றொஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

906.)இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்

907.)பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து

908.)நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்

909.)அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்

910.)எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

911.)அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

912.)பயன்துாக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்துாக்கி நள்ளா விடல்

913.)பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதலே பிணந்தழீ அற்று

914.)பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

915.)பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்

916.)தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்

917.)நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

918.)ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

919.)வரைவிலா மாணிழையார் மென்தோாள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

920.)இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

921.)உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்

922.)உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்

923.)ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

924.)நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

925.)கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்

926.)துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

927.)உள்ளொற்றி உள்ளுர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3

928.)களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததுாஉம் ஆங்கே மிகும்

929.)களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீ அற்று

930.)கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

931.)வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதுாஉம்
துாண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

932.)ஒன்றெய்தி நுாறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

933.)உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போலய்ப் புறமே படும்

934.)சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்

935.)கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

936.)அகடாரார் அல்லல் உழப்பர்கசூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்

937.)பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்

938.)பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளி அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

939.)உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்

940.)இழத்தொறுாஉம் காதலக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுாஉம் காதற்று உயிர்

941.)மிகினும் குறையினும் நோய்செய்யும் நாலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

942.)மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

943.)அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

944.)அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

945.)மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

946.)இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

947.)தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

948.)நோய்நாடி நோய்முத
வாய்நாடி வாய்ப்பச் செயல்

949.)உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

950.)உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து

951.)இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு

952.)ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

953.)நகைரகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு

954.)அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறரந்தார்
குன்றுவ செய்தல் இலர்

955.)வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

956.)சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்

957.)குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதகேகண் மறுப்போல் உயர்ந்து

958.)நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஜயப் படும்

959.)நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

960.)நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

961.)இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

962.)சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

963.)பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

964.)தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

965.)குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

966.)புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை

967.)ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலனே அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

968.)மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து

969.)மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

970.)இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு

971.)ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்

972.)பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

973.)மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

974.)ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

975.)பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

976.)சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோாக்கு

977.)இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்

978.)பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

979.)பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

980.)அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

981.)கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

982.)குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதுாஉம் அன்று

983.)அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய துாண்

984.)கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு

985.)ஆற்றுவார் ஆற்றல் பணி தல் அதுசான்றோார்
மாற்றாரை மாற்றும் படை

986.)சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

987.)இன்னாசெய் தார்க்கும் இனி யவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

988.)இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்

989.)ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

990.)சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை

991.)எண்பதத்தால் எய்தல் எளி தென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

992.)அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

993.)உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

994.)யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு

995.)நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

996.)பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்

997.)அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்

998.)நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை

999.)நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

1000.)பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

1001.0வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

1002.)பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

1003.)ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

1004.)எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

1005.)கொடுப்பதுாஉம் துய்ப்பதுாஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

1006.)ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்

1007.)அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்முத் தற்று

1008.)நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

1009.)அன்பொரீ இத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

1010.)சீருடைச் செல்வர் சிறுதுனி மார
வறங்கூர்ந் தனையது உடைத்து







Source : E-book \ internet archive website
முழுவதும் எழுதியவை 
நன்றி .

Comments

Popular posts from this blog

Maltodextrin என்றால் என்ன? | "Zero Sugar" உணவுகளில் மறைந்திருக்கும் ஆபத்து — தமிழில்

பூமியில் மிகவும் தீங்கான கார்போஹைட்ரேட் என்ன தெரியுமா? சர்க்கரை இல்லை! பல நேரங்களில் "Zero Sugar" என்று விளம்பரப்படுத்தப்படும் Maltodextrin தான் உண்மையான ஆபத்தான பொருள். இது நமது 60% உணவுப் பொருட்களில் நமக்கு தெரியாமலே இருக்கிறது. 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: Maltodextrin என்றால் என்ன? Glycemic Index ஒப்பீடு எங்கெல்லாம் இருக்கிறது? உடலுக்கு என்ன பாதிப்பு செய்கிறது? B1 Thiamine குறைபாடு தொடர்பு Resistant Maltodextrin பற்றிய உண்மை வீட்டிலேயே கண்டறியும் Iodine Test என்ன செய்ய வேண்டும்? 🧪 Maltodextrin என்றால் என்ன? Maltodextrin என்பது ஒரு Industrial Starch — ஆனால் இது சர்க்கரையை விட வேகமாக இரத்த சர்க்கரையை உயர்த்துகிறது. ஆனால் label-ல் "Sugar Free" என்று எழுதலாம் — ஏனென்றால் இது technically sugar அல்ல! 🔬 சர்க்கரை vs Maltodextrin — வித்தியாசம் என்ன? Sugar = 1 அல்லது 2 sugar units → "Sugar" என்று அழைக்கலாம் Maltodextrin = 3 முதல் 17 sugar units → "Complex Carbohyd...

புற்றுநோய் ஒரு Parasite போல் செயல்படுகிறது | Fenbendazole உண்மை என்ன? — தமிழில் முழு விளக்கம்

புற்றுநோய் (Cancer) உண்மையில் ஒரு Parasite போல் செயல்படுகிறது — இது உங்கள் resources-ஐ திருடுகிறது, புதிய இடங்களுக்கு பரவுகிறது. Parasitic Worms-ஐ கொல்ல வடிவமைக்கப்பட்ட மலிவான மருந்துகள் Stage 4 Cancer நோயாளிகளை Complete Remission -க்கு கொண்டு சென்றுள்ளன. இந்த ஆச்சரியமான உண்மைகளை விரிவாக பார்க்கலாம். 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: Cancer இன்று — அதிர்ச்சியான statistics Cancer என்றால் என்ன? — Mitochondria தொடர்பு Warburg Effect — Nobel Prize கண்டுபிடிப்பு Cancer ஒரு Parasite போல் — 3 Survival Mechanisms Antiparasitic Drugs எப்படி உதவுகின்றன? ஏன் இந்த தகவல் மறைக்கப்படுகிறது? Immune System — Cancer-ஐ தோற்கடிக்கும் வழி 📊 Cancer இன்று — அதிர்ச்சியான Statistics 2M+ 2025-ல் அமெரிக்காவில் புதிய Cancer cases 79% இளைஞர்களில் Cancer — 30 வருடத்தில் அதிகரிப்பு #1 இப்போது இளம் ஆண்களில் Colorectal Cancer — முன்பு #4 ஆக இருந்தது! ⚠️ "Survival Rate Improved" என்று சொல்கிறார்...

Lab Results Normal என்றால் நீங்கள் Healthy இல்லை! | 8 முக்கியமான Blood Tests — தமிழில்

"உங்கள் lab results normal-ஆக இருக்கிறது" — இது நவீன மருத்துவத்தில் மிகவும் ஆபத்தான வாக்கியம். "Normal" என்றால் நீங்கள் நோய் இல்லாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் சராசரியாக இருக்கிறீர்கள் மட்டுமே — அந்த சராசரி population-ஐயே நோக்கினால் அது metabolically sick bucket-தில் இருக்கலாம்! 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: "Normal" என்ற வார்த்தையின் உண்மை Fasting Glucose — மறைக்கப்பட்ட வரலாறு Fasting Insulin — Medicine-ன் மிகப்பெரிய Blind Spot HOMA-IR — Insulin Resistance கண்டறியும் test A1C — 3 மாத blood sugar average Dawn Phenomenon என்றால் என்ன? Minerals — Blood test ஏன் போதாது? 8 முக்கியமான Lab Tests — முழு விவரம் 🔔 "Normal" என்றால் என்ன? — உண்மை என்ன? ❗ "Normal" = "Average" — "Healthy" இல்லை! Lab reference ranges என்பது population-ன் bell curve-ல் இருந்து எடுக்கப்படுகிறது. Population நோய்வாய்ப்பட்டால் அந்த "normal" range-...